இங்கிலாந்து அணி வீரர்களுடன் பிரிட்டன் பிரதமர் கிரிக்கெட் விளையாடிய மகிழ்ந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரித்தானியப் பிரதமராக முதல்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார்.
கிரிக்கெட் விளையாடிய பிரிட்டன் பிரதமர்
இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் கோப்பையுடன் பிரதமர் அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டி20 உலக சாம்பியன்களான இங்கிலாந்து அணி வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
ஜோடர்ன், சாம் கரண் ஆகியோர் பிரதமருக்கு பந்து வீச, ஜோடர்ன் பந்து வீச்சில் பிரதமர் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதை ஜோடர்ன் கொண்டாடினார். அதன் பின் பிரதமரும் பந்து வீசி மகிழ்ந்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Never in doubt ☝@CJordan nicks off the PM with a beauty after a working over from @CurranSM‘s left arm spin 🔥
Big send off as well 👀pic.twitter.com/JGTEwQiLx5
— Surrey Cricket (@surreycricket) March 23, 2023