இந்தியாவிற்கு எதிராக பேசவில்லை.. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.. கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன் – ராகுல்

 

அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு

எனது லண்டன் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் – ராகுல்

அதானியுடன், குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து மோடி நட்பு பாராட்டி வருகிறார் – ராகுல்

எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை; தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பேன் – ராகுல்

லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்புக் கேட்க பாஜகவினர் கோரினர்; அதுபற்றி நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கேட்டேன் – ராகுல்

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கேட்டதற்கு, மக்களவை சபாநாயகர், நான் பேச அனுமதிக்க மறுத்துவிட்டார் – ராகுல்

இந்திய விவகாரத்தில் தலையிட எந்தவொரு நாட்டிற்கும் நான் கோரிக்கை வைக்கவில்லை – ராகுல் காந்தி

இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக, மத்திய அமைச்சர் கூறும், எனது லண்டன் பேச்சுகளை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் – ராகுல்

அதானியின் போலி நிறுவனங்களுக்குச் சென்ற முதலீடுகள் குறித்து நான் கேள்வி எழுப்ப கூடாது என்பதற்காகவே, இத்தனை நாடகங்களும் அரங்கேற்றம் – ராகுல்

பதவி பறிப்பு, கைது நடவடிக்கை உள்ளிட்ட எதற்காகவும், நான் ஒருபோதும் அஞ்ச மாட்டேன் – ராகுல் காந்தி

பிரதமருடன், அதானி ஒரே விமானத்தில் பயணித்த புகைப்படங்களை வெளியிட்ட பிறகே, என் மீதான தாக்குதல்கள் தொடங்கின – ராகுல்

மோடிக்கும், அதானிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியிருந்தேன்; இன்று வரை அதற்கு பதில் இல்லை – ராகுல்

நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை நான் மதிக்கிறேன்; அதை ஏற்றுக் கொள்கிறேன் – ராகுல்

அதானி ஷெல் (போலி) நிறுவனங்களுக்கு வந்த ரூ.20,000 கோடி எங்கிருந்து வந்தது; அந்த பணம் யாருடையது? – ராகுல் கேள்வி

உண்மையை சொல்வது தவிர வேறு எதிலும் எனக்கு விருப்பம் இல்லை; கைது செய்யப்பட்டாலும் உண்மையை தொடர்ந்து பேசுவேன் – ராகுல்

அதானி குறித்து எனது அடுத்த பேச்சை கேட்க பிரதமர் மோடி பயப்படுகிறார்; அந்த பயத்தை அவரது கண்ணில் பார்த்தேன் – ராகுல்

என் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகளால், எதிர்க்கட்சிகளுக்கு அனுகூலமே தவிர பின்னடைவு எதுவும் இல்லை – ராகுல்

என் மீதான நடவடிக்கைகள் மூலம், எதிர்க்கட்சிகளுக்கு, மத்திய பாஜக அரசு, புதிய ஆயுதத்தை கொடுத்துள்ளது – ராகுல்

என்னைத் தொடர்ந்து சிறையில் அடைத்தாலும்; தொடர்ந்தோ, நிரந்தரமாகவோ தகுதி நீக்கம் செய்தாலும், நான் தொடர்ந்து செயல்படுவேன் – ராகுல்

செய்தியாளர்களை வழக்கமாக இயல்பாக சந்திக்கும் ராகுல் இன்று பலமுறை தண்ணீர் குடித்தவாறே செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார்

செய்தியாளர்களின் சந்திப்பை நிகழ்த்திக் கொண்டிருந்த ராகுல் காந்தி திடீரென பாதியில் செய்தியாளர் சந்திப்பை முடித்து கோபத்துடன் வெளியேறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.