டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.