கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் அருகே மின்கம்பத்தின் மீது மோதிய ஆண் காட்டுயானை மேல் மின்கம்பம் சாய்ந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து பூச்சியூர் பகுதிக்கு உணவு தேடி வந்த யானை இன்று காலை ஏழு மணியளவில் இறந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.