அறிவித்திருந்த நட்சத்திர வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு ‘மகளிர் உரிமைத்தொகை’ மாதம் ரூ.1000 திட்டம் வரும் செப்டம்பர் முதல் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என சட்டசபையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்நிலையில், உரிமைத்தொகை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 7000 கோடி ரூபாய் நிதியை 1000 ரூபாயாக பிரித்தால், 58 லட்சம் பெண்களுக்கு மட்டுமே இந்தத் திட்டம் சென்றடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் என சொல்லிவிட்டு தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகையில் யாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற வாதம் சட்டசபையில் எழுந்துள்ளது.
பட்ஜெட் விவாதம்
தமிழக சட்டசபையில் பொது மற்றும் விவசாய பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடந்தது. அப்போது கோவை தெற்கு எம்எல்ஏ
மகளிர் உரிமை தொகை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், தமிழக அரசு அறிவித்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாத உரிமை தொகையான 1000 ஆயிரம் குறித்து எனக்கொரு யோசனை உள்ளது. அதிகம் மது குடிப்பவர்களின் மனைவிகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதை உறுதி செய்யலாம். மதுக்கடைகளில் மது வாங்குபவர்களுக்கு ஆதார் என்னை கட்டாயமாக்க வேண்டும். அப்படி வழங்கினால் யார் அதிகமாக மது வாங்குகிறார்கள் என்பது தெரிந்து விடும் என வானதி சீனிவாசன் கூறினார்.
மேலும், தமிழகத்தில்தான் அதிக விதவைகள் உள்ளனர் என்றும் இதற்கு மதுக்கடைகள்தான் காரணம் என்றும் கூறினார். அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தில் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப் பிரதேசம், கர்நாடகாவிலும் மதுக்கடைகள் மூலம் வருவாய் வருகிறது. தமிழகத்தில் மது விலை அதிகமாக இருப்பதால் விற்பனை அதிகமாக உள்ளது என சுட்டிக்காட்டினார்.
வானதி சீனிவாசனின் இந்த யோசனை அரசுக்கு குட்டு வைத்ததை போலவும் பார்க்கப்படுகிறது. ஒன்று, தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து அந்த வருவாயிலாவது நலத்திட்டங்களை வழங்கலாமே என்றும்… டாஸ்மாக் மூலம் உடல்நலம் பாதிப்படைந்து சிறிய வயதிலேயே உயிரை விட்டவர்களின் மனைவிகளுக்கு அரசு வழங்கும் நிவாரணம் என்று நேரிடையாக சொல்லாமல் சொல்லி உள்ளார் வானதி சீனிவாசன். இருப்பினும், சட்டசபையில் வானதி சீனிவாசனைன் மது கடை குறித்த பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.