புதுடில்லி:உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்றார். 13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டில்லியில் நடந்து வருகிறது. இதில், 48 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலிய வீராங்கனை லுட்சிஹன் அட்லெட்செட்கை எதிர்கொண்டார்.
போட்டி துவங்கியது முதலே நிது கங்காஸ் ஆதிக்கம் செலுத்தினார். இறுதியில் 5–0 என்ற புள்ளிகள் அடிப்படையில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நிது கங்காஸ் தங்கப்பதக்கம் வென்று சாதித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement