எங்கள் துணிச்சலான வீரர்களை களத்தில் முன்நிறுத்த இவை வேண்டும்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி


அதிக ஆயுதங்கள் இல்லாமல் உக்ரைன் எதிர் தாக்குதலை நடத்த முடியாது என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் தேவை

ரஷ்யாவுக்கு எதிரான போரில் ஈடுபட மேலும் ஆயுதங்கள் தேவை என கூறியுள்ள ஜெலென்ஸ்கி, நாட்டின் கிழக்குப் பகுதியில் நிலைமை நன்றாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஜப்பானிய செய்தித்தாளிடம் அவர் கூறுகையில், ‘அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வெடிமருந்து விநியோகத்தை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் நண்பர்களிடம் இருந்து வெடிமருந்துகள் வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்.

ஜேர்மனி மற்றும் பிறரால் வழங்கப்படும் டாங்கிகள் ஏப்ரல் முதல் போர்க்களத்தில் எவ்வாறு நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவித்துள்ளார்.

zelensky/ஜெலென்ஸ்கி @Reuters

துணிச்சலான வீரர்கள் 

மேலும் அவர் கூறுகையில், ‘உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அகற்ற எங்களுக்கு டாங்கிகள் தேவை. எங்களால் டாங்கிகள், பீரங்கி மற்றும் நீண்ட தூர ராக்கெட்டுகள் இல்லாமல் எங்கள் துணிச்சலான வீரர்களை முன் வரிசைக்கு அனுப்ப முடியாது.

எங்கள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு முதன்மையானது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முன்மொழிவு குறித்து பெய்ஜிங்கில் இருந்து செய்தி வரவில்லை’ என தெரிவித்துள்ளார்.   

zelensky/ஜெலென்ஸ்கி @UKRAINIAN PRESIDENTIAL PRESS SER

எங்கள் துணிச்சலான வீரர்களை களத்தில் முன்நிறுத்த இவை வேண்டும்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி | Zelensky Said We Need More Weapons Against Russia @ARIS MESSINIS/AFP via Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.