புதுடில்லி: ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றும், எந்தவொரு மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன் ” என்றும் காங்., முன்னாள் தலைவரும், எம்.பி., பதவியிழந்தவருமான ராகுல் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அதானி் முறைகேடு குறித்து பேசினேன்
டில்லியின் காங்., தலைமை அலுவலகத்தில் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது:
இந்தியாவில் ஜனநாயகம் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதானிக்காக பல்வேறு சட்டங்கள் வளைக்கப்பட்டுள்ளன. மோடி, அதானி இடையிலான தொடர்பு குறித்து பார்லி.,யில் கேள்வி எழுப்பினேன். என்னை பேச விடாமல் தடுத்தனர். 20 ஆயிரம் கோடி முறைகேடு தொடர்பாக, அதானிக்கு எங்கிருந்து பணம் வந்தது. யார் பணம் ? பல போலி நிறுவனங்கள் மூலம் குழும முறைகேடுகள் நடந்துள்ளன. சீன நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அதானி குறித்து பேசியது முதல் பிரச்சனை துவங்குகியது.
மேலும் அதானி குறித்து பேசுவதை தடுக்க பார்க்கின்றனர். எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது, நான் இந்தியாவுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. தேசத்திற்கு எதிரான சக்திகளை போராடி முறியடிப்பேன். இந்தியாவை இழிவுப்படுத்தவில்லை. அதானி குறித்து பேசியபோது பிரதமர் கண்களில் அச்சப்படுவதை பார்த்தேன். அடுத்தும் என்ன பேச போகிறேனோ என்று அஞ்சுகின்றனர்.
எதிர்கட்சிகள் அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி
சபாநாயகருக்கு நான் அனுப்பியுள்ள கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை. எனது தொகுதியான வயநாடு மக்களுக்கு நான் கடிதம் எழுத உள்ளேன். என்மீது இந்த தேச மக்கள் அன்பும் , மதிப்பும் வைத்துள்ளனர். அவர்களிடம் நியாயம் கேட்பேன். பிரதமர் மோடியை பார்த்து பயப்பட மாட்டேன். சிறை செல்ல அஞ்ச மாட்டேன். பதவியை பறித்து விட்டதால் நான் அமைதியாக இருக்க முடியாது. எதிர்கட்சிகள் எனக்கு அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி. தேர்தலில் போட்டியிட அனுமதிக்க விட்டாலும் தொடர்ந்து பணியாற்றுவேன். நான் மன்னிப்பு கேட்க சர்வார்கர் அல்ல.
பார்லி.,யில் அமைச்சர்கள் பொய்களை பேசி வருகின்றனர். நான் கேள்வி கேட்பதை தடுக்க முடியாது. நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இவ்வாறு ராகுல் கூறினார்.
காங்., முன்னாள் தலைவர் ராகுல் மோடி ஜாதியை குறித்து பேசியதால் கோர்ட் அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து ராகுல் எம்பி பதவியை லோக்சபா செயலர் தகுதி நீக்கம் செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement