புபனேஸ்வர் : பூமிநேரம் கடைப்பிடிப்பு தினத்தை முன்னிட்டு ஒடிசா கடற்கரையில் பிரம்மாண்ட மணற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதற்கிடையே, பூமிநேரமானது இன்று, அதாவது ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதத்தின் கடைசி சனிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த தினத்தை அனுசரித்து வரும் உலக நாடுகள், சுமார் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அனைத்து மின்சாரத்தை சேமித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று இந்தியாவில் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தேவையற்ற மின்சார பயன்பாட்டை தவிர்க்கும்படி கூறி ஒடிசாவின் பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் அமைத்திருக்கிறார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ காலநிலை மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பூரி கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட பல்புகளைப் பயன்படுத்தி, நான் அமைத்த மணல் சிற்பம்,’ என்று தெரிவித்துள்ளார்.