இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள கச்சத்தீவு பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நெடுந்தீவைச் சேர்ந்த பாதிரியார் வசந்தன் கூறியதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மற்றும் 4 ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள தங்கச்சிமடம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றனர். அதேபோல் இலங்கையில் உள்ள நெடுந்தீவு […]