கடலூர்: வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கொத்து கொத்தாக உயிரிழப்பு

கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் வெள்ளி கடற்கரையில் ஆலிவ் ரெட்லி ஆமைகள் பொரிப்பகம் உள்ளது. கடற்கரை ஓரத்தில் உள்ள ஆலிவ் ரெட்லி ஆமைகளின் முட்டைகளை சேகரித்து அவற்றை பொரிப்பகத்தில் வைத்து பராமரிப்பது வழக்கம். முட்டைகளில் இருந்து குஞ்சுகள் பாதுகாப்பாக வெளியே வந்த பிறகு, அவை முறையாக கடலில் விடப்படும். இந்நிலையில் இன்று வெள்ளி கடற்கரையில் உள்ள பொரிப்பகத்திலிருந்து ஆமைக் குஞ்சுகள் வெளியே வந்து கூட்டம் கூட்டமாக உயிரிழந்துள்ளது.

image
அரசு ஆமைகள் பராமரிப்புக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. ஆலிவ் ரெட்லி ஆமைகள் இனம் குறைந்து கொண்டே செல்வதால் அதனை பராமரிக்க பல நாடுகள் முன்வருகிறது. அந்தவகையில், இந்தியாவும் இதில் பெரும் கவனம் செலுத்துகிறது. இந்நிலையில் கடலூரில் கூட்டம் கூட்டமாக ஆமை குஞ்சுகள் உயிரிழந்திருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை சரிசெய்யாமல் விடுவது, அந்த இனத்தின் அழிவுக்கு வழிவகுக்குமென அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.