கடவுளின் பாதுகாப்பு தேவை! கொடிய சூறாவளிக்கு உயரும் பலி எண்ணிக்கை..ஆளுநரின் வார்த்தைகள்

அமெரிக்காவின் மிசிசிப்பி நகரை தாக்கிய அழிவுகரமான சூறாவளிக்கு இதுவரை 23 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை

மிசிசிப்பி நகரை கொடிய சூறாவளி தாக்கியதால், இடியுடன் பலத்த மழை பெய்தது.

இதில் 14 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

ஷார்கி மற்றும் ஹம்ப்ரீஸ் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவசர மேலாண்மை வாரியம் கூறியுள்ளது.

கடவுளின் பாதுகாப்பு தேவை! கொடிய சூறாவளிக்கு உயரும் பலி எண்ணிக்கை..ஆளுநரின் வார்த்தைகள் | Death Increased Mississippi Storms @Rogelio V. Solis/AP

கடவுளின் பாதுகாப்பு தேவை! கொடிய சூறாவளிக்கு உயரும் பலி எண்ணிக்கை..ஆளுநரின் வார்த்தைகள் | Death Increased Mississippi Storms @Rogelio V. Solis/AP

ஆளுநரின் பதிவு

இதற்கிடையில் ஆளுநர் டேட் ரீவ்ஸ் வெளியிட்ட பதிவில், ‘MS டெல்டாவில் உள்ள பலருக்கு இன்று இரவு உங்கள் பிரார்த்தனை மற்றும் கடவுளின் பாதுகாப்பு தேவை.

நாங்கள் மருத்துவ உதவியை செயல்படுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்காக அதிக ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அவசரகால சொத்துக்களை வழங்குகிறோம். தேடுதல் மற்றும் மீட்பு செயலில் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

டேட் ரீவ்ஸ்/Tate Reeves @Rogelio V. Solis/AP file

மேலும் அவர் தொடர்ந்து பிராத்தனை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாநில அதிகாரிகளின் கூற்றுப்படி ஷார்கி, ஹம்ப்ரேஸ், கரோல் மற்றும் மன்ரோ மாவட்டங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன.  

கடவுளின் பாதுகாப்பு தேவை! கொடிய சூறாவளிக்கு உயரும் பலி எண்ணிக்கை..ஆளுநரின் வார்த்தைகள் | Death Increased Mississippi Storms @Rogelio V. Solis/AP

கடவுளின் பாதுகாப்பு தேவை! கொடிய சூறாவளிக்கு உயரும் பலி எண்ணிக்கை..ஆளுநரின் வார்த்தைகள் | Death Increased Mississippi Storms @Rogelio V. Solis/AP

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.