மதுரை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற பின் சந்திரசூட் தமிழ்நாட்டுக்கு முதன் முறையாக வருகை தந்திருக்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் சந்திரசூட் அவர்களுக்கு முதலமைச்சர் என்ற முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மதுரையில் ஐகோர்ட் கிளை அமைக்க 1972 முதல் முயற்சி செய்து தென்மாவட்ட மக்களின் கனவை கலைஞர் நனவாக்கினார். கலைஞரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற கிளை கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.