ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையில் பயன்படுத்தும் வாகனங்களை எஸ்பி., பிரபாகர் ஆய்வு செய்தார். காவல்துறையில் இரு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதாக, தொடர்ந்து இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பது குறித்து ஆண்டு தோறும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் இயக்கப்படும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்யும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடந்தது.
ஆய்வின் போது, சிறந்த முறையில் வாகனங்களை பராமரித்து வரும் காவலர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். தொடர்ந்து காவலர்கள் மற்றும் காவல் வாகனங்களை இயக்கும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, டிஎஸ்பி., யசோதா மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.