கூகுளில் வேலை வாங்குவது ஈஸி… ஆனால் இதுதான் ரொம்ப கஷ்டம் – மன வலியை பகிர்ந்த இளைஞர்!

இளைஞர் ஒருவர், தான் கூகுள் நிறுவனத்தின் நேர்காணலில் எப்படி தேர்ச்சி பெற்றதையும், ஆனால் பெங்களூரு வாடகை வீட்டுக்காக அதன் உரிமையாளர் நடத்திய நேர்காணலில் தோல்வியடந்தையும் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் அனுபவ பகிர்வு தற்போது வைரலாகி வருகிறது. ரிபு தமன் படோரியா என்ற அந்த இளைஞர், பெங்களூரு வாடகை வீட்டின் உரிமையாளருடன் நடந்த நேர்காணல் அனுபவத்தை LinkedIn-இல் பகிர்ந்து கொண்டார். 

கடந்த ஆண்டு, அவர் அமெரிக்காவின் சியாட்டிலில் இருந்து பெங்களூரு சென்றார். கொரோனா தொற்றை தொடர்ந்து, அவர் அங்கு வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளார். நியாயமான வாடகையில், ஒரு வீட்டை கண்டுபிடிப்பது அந்த அளவிற்கு கடினமாக இருக்கும் என்பதை அவர் நம்பவே இல்லை எனலாம். 

“தேவையின் அடிப்படையில், பல அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், வீட்டை வாடகைக்கு கேட்டு வருபவர்களிடம் நேர்காணல் நடத்துவது வழக்கம். வாடகை வீட்டு உரிமையாளரிடம், எனது முதல் நேர்காணலில் நான் மோசமாகத் தோல்வியடைந்தபோது நான் திகைத்துப் போனேன். கூகுளில் தேர்ச்சி பெறுவதை விட வீட்டு உரிமையாளர்களின் நேர்காணல்கள் கடினமான ஒன்று என்பதை உணர்ந்ததால், அது எனக்கு ஒரு எச்சரிக்கையாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர்,”ஒவ்வொரு முறையும் நான் தோல்வியடையும் போது சுயபரிசோதனை செய்து சிறப்பாக செயல்பட முயற்சிப்பதால், எனது நேர்காணலின் செயல்திறன், அவர்களுக்கு தடையாக இருப்பது போன்றவை ஏதேனும் இருந்தால், நான் நேரடியாக வீட்டு உரிமையாளரிடமே கருத்துகளை கேட்டேன்.

கூகுளில் பணிபுரிவது மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்யவில்லை; நான் அவர்களின் வீட்டை வாங்கிவிடப் போகிறேன் என்று அவர்கள் நினைக்கும் வகையில் வீட்டு உரிமையாளர் கருத்துகளை அளவிற்கு வெளிப்படையாக இருந்தார்” என குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு அடுத்த, நேர்காணலிலேயே அவர் தேர்ச்சி பெற்றார் என கூறியுள்ளார். ஒருவேளை, தான் கூகுளில் பணிப்புரிவதை அவர்களிடம் மறைத்திருக்கலாம் என தெரிகிறது. அவரின் இந்த சமூக வலைதள பதிவு வைரலானது முதல் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பலரும் இணையத்தில் கமெண்ட் செய்துள்ளனர். அதில் ஒருவர்,”இதைப் படித்தவுடன் பயமாக இருக்கிறது. நானும் அந்த நேர்காணல்களில் தோல்வியடைந்தால் என்ன செய்வது?”.

மேலும் ஒருவர், “கூகுள் நேர்காணலை விட வீட்டு உரிமையாளர் நேர்காணல் மிகவும் கடினமானது என்று நீங்கள் உறுதியாகக் கூறுகிறீர்கள். எனவே, வாடகைதாரர் நேர்காணலில் தேர்ச்சி பெற்றால், கூகுள் அவர்களுக்கு நிச்சயம் வேலை வழங்கும்.” என நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார். 

“குத்தகைதாரர் நேர்காணல்களை நீங்கள் எப்படி வெற்றிகரமாக நிறைவு செய்யலாம், மக்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு நிறுவனத்தை நீங்கள் தொடங்குவீர்கள் என்று தெரிகிறது,” என்றும் ஒருவர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.