கோவை: கோவையில் மின் கம்பம் விழுந்து மின்சாரம் தாக்கியதில் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள பூச்சியூர் என்ற பகுதிக்கு இன்று (மார்ச் 25) காலை 30 வயது உள்ள ஆண் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்துள்ளது. இந்த யானை மீது சிமெண்ட் மின் கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அது உயிரிழந்தது. இதன்பிறகு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
யானைக்கு உடலில் அரிப்பு ஏற்பட்ட காரணத்தால், மின் கம்பத்தில் சொறியச் சென்றபோது மின் கம்பம் விழுந்து, மின்சாரம் தாக்கி யானை மரணம் அடைந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.