இத்தாலி அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் சர்வதே கடல் எல்லையில் தத்தளித்த 78 ஆப்ரிக்க புலம்பெயர்ந்தோரை தனியார் தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர்.
ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலியில் தஞ்சமடைவதற்காக புலம்பெயர் மக்கள் வந்துக்கொண்டிருந்த படகு பழுதாகி விட்டதாக, இத்தாலியிலுள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, கப்பலில் சென்று, மால்டிஸ் பகுதியில் மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்த 28 சிறுவர்கள், கர்ப்பிணி உள்பட 3 பெண்களையும் தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டனர்.
மார்ச் மாதம் வரையில் 20 ஆயிரம் பேர் அகதிகளாக இத்தாலிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.