சீன செயலிகளுக்கு பிரான்ஸ் செக்| France Czech for Chinese apps

பாரீஸ், : சீன மற்றும் அமெரிக்கா நிறுவனங்களின் செயலிகளை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் உள்ள பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்- டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அதன்படி பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் டிக்-டாக் செயலியை அரசின் மின்னணு சாதனங்களில் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இவை தனியுரிமையை மீறுவதாக குற்றச்சாட்டுஎழுந்தது.

அதுபோல ரஷியாவில் டிக்-டாக், ஸ்னப்-சாட், டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவை பயங்கரவாத செயலிகளாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.இதன் அடிப்படையில்சீன, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் செயலிகள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.