மீது ஈரோடு பிரச்சார விவகாரத்தில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் வன்முறையை தூண்டுவதாக மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கிற்கு
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 23 ஆம் தேதி திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்
அரசின் மகளிர் உரிமை தொகை அறிவிப்பை குறித்து கேள்வி எழுப்பினார். தேர்தல் வாக்குறுதியில் ”தகுதியுள்ள பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் வழங்குவோம்” என திமுக கூறவில்லை.
ஆனால், வாக்குறுதியை கூறி ஆட்சிக்கு வந்து தற்போது தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும்தான் உரிமை தொகை வழங்கப்படும் என்கிறார்கள். இந்த தகுதியை எதை வைத்து தீர்மானிப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார் சீமான். அதனை தொடர்ந்து, 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த நாடு முழுவதும் உள்ள மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், கடந்த பாராளுமன்ற தேர்தலில் இதுபோல ஒரு அணியை உருவாக்கினார்கள் ஆனால் தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்ததால் அந்தக் கூட்டணி சிதறுண்டு போனது என குற்றம் சாட்டினார். இந்நிலையில் சீமான் அதே நாளில் நடந்த போராட்டத்தின்போது வன்முறையை தூண்டும் விதமாகவும், அவதூறாகவும் பேசியதாக சீமான் மீதும் நாதக ஆதரவாளர்கள் 500 பேர் மீதும் கன்டோண்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாம் தமிழர் சீமான் திமுகவை பொதுவெளியில் விமர்சித்து வருவது அறிவாலயத்துக்கு தலைவலியை கொடுத்து வருவதாக சொல்கின்றனர். குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினாலும் அதில் இருக்கும் பிழையை தேடி விமர்சிப்பதும், இலவசங்களை கூட தவறாக சுட்டிக்காட்டி மக்களை திசை திருப்பவதாகவும் அவர் மீது திமுகவினர் குற்றசாட்டு வைக்கின்றனர்.
முக்கியமாக நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் அதிகம் செல்வதால் அடுத்த தலைமுறையினரின் வாக்குகளை இழக்கும் அபாயமும் திராவிட கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தொடர்ந்து தாக்கி பேசி வரும் சீமானை கைது செய்தால் என்ன என்ற யோசனை அறிவாலயத்தில் முளைத்துள்ளதாம்.