செங்கல்பட்டு அருகே புக்கத்துறை – உத்திரமேரூர்சாலையை இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் காஞ்சிபுரம் நெ கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் புக்கத்துறை உத்திரமேரூர் சாலை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டு ரூ.54 கோடி மதிப்பில் ? கி.மீ இருவழிச் சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை இன்று (25-03-2002) பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுபாலங்கள் துறை அமைச்சர் எவவேலு நேரில் பர்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுபாலங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:
முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு சாலைகள் நான்கு வழிசாயைாக மாற்றினால் தான் விபத்துகளை குறைத்து வாகளங்கள் விரைந்து சென்று இலக்குளை அடையமுடியும்ஐ என்ற நோக்கில் 2021-2022 காலத்தில் 252 கிலோமிட்டர் சாலை பணிகள் 3500 கோடி ரூபாயில் 12 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 2022-307ம் ஆண்டில் 191 கிலோமீட்டர் சாலை பணிகளை 31 இடங்களில் 140 கோடியில் திட்டமதிப்பு செயல்படுத்தப்படுகிறது.

2001-2022 திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ம் மதுராந்தகம் வட்டம் காஞ்சிபுரம் (நெ) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் புக்கத்துறை உத்திரமேரூர் சாலை (எஸ்.எச்.பது கி.மீ வரை பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை இரு வழி தடமாக உள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021 – 2022 ஆம் ஆண்டு 545 இலட்சம் மதிப்பில் கி.மீ 12 – 316 மற்றும் 14-2-1316 வரை இருவழிச்சாலையிலிருந்து நாள்கு வழிச்சாலையாக அகலப்படுத்துதல் மற்றும் உறுதிபடுத்துதல் பணி சிறு பாலங்கள் ரூபாய் 4723,31 இலட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று முன்னேற்றத்தில் உள்ளது. நிதி நிலைக்கேற்ப இந்த திட்டங்களை மாநிலம் முழுவதும் நிறைவேற்றி வருகின்றோம்.

பொதுவாக முதலமைச்சர் என்ன கருதுகிறார் என்று சொன்னால் தமிழகத்தில் விபத்துகளை குறைக்க வேண்டும். மேலும் விபத்துகளை குறைக்க வேண்டுமென்றால் சாலைகளை தரமாக அமைக்க வேண்டும் ஆகையால் இன்றைய தினத்தில் நானும் தமாவட்ட ஆட்சியர்ஐ சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தோம். சாலையை விரிவு படுத்துகின்ற பொழுது சில இடங்களில் தவிர்க்க முடியாத மரங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

ஒரு மரங்களை எடுத்தால் அதற்கு பதிலாக 10 மரங்கள் நட வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே இந்த பணிகள் முடிந்தவுடன் இருபுறமும் ஒரு மரத்துக்கு பதிலாக பத்து மரங்களை நடும் பணிகள் துறையின் சார்பாக மேற்கொள்வோம் பசுமையாக இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் எண்ணமாக உள்ளது என்று பொதுபணித்துறை மற்றும் நெடுஞ்சாலை சிறுபாலங்கள் துறை அமைச்சர் தெரிவித்தாரர்.

இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர.ராகுல்நாத் இஆப நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  K. சுந்தர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி நுர்கேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் சுலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.