சென்னையில் உரிமை கோரப்படாத கைவிடப்பட்ட 1,593 வாகனங்கள் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
சென்னை பெருநகர மற்றும் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத கைவிடப்பட்ட 1,520 இருசக்கர வாகனங்கள், 73 மூன்று சக்கர வாகனங்கள் (ஆட்டோ) என மொத்தம் 1,593 மோட்டர் வாகனங்கள் சென்னை புதுப்பேட்டை காவல் ஆயுதபடை மைதானத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனங்கள் 13/04/2023 அன்று காலை 10 மணியளவில் பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த பகிரங்க ஏலத்திற்கான முன்பதிவு வருகின்ற ஏப்ரல் 3, 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 2 மணி வரை சென்னை புதுப்பேட்டை ஆயுதபடை மைதானத்தில் நடைபெற உள்ளது. அடையாள மற்றும் GST பதிவெண் சான்றுடன் வரும் ஏலதாரர்கள் மட்டுமே முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர்.
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 13ஆம் தேதி காலை 10 மணியளவில் முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபெறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத் தொகை மற்றும் GST தொகையினை மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.