தமிழ்நாடு வானிலை: 17 மாவட்டங்களில் கனமழை – சென்னைக்கு மிதமான மழை!

தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,

25.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், இராணிப்பேட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
கனமழை
பெய்யவாய்ப்புள்ளது.

26.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27.03.2023 மற்றும் 28.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சந்தியூர் (சேலம்), வெள்ளக்கோவில் (திருப்பூர்) தலா 8, சங்கரிதுர்க் (சேலம்), அவினாசி (திருப்பூர்), PWD கலெக்டர் அலுவலகம் (திருப்பூர்), கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்) தலா 7, பேரையூர் (மதுரை), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 5,

வத்திராயிருப்பு (விருதுநகர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 4, ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), கெத்தை (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), கோவில்பட்டி (தூத்துக்குடி), சிவகிரி (தென்காசி), DC அலுவலகம் திருப்பூர் (திருப்பூர்) தலா 3,

பிலவக்கல் (விருதுநகர்), கிருஷ்ணகிரி, பீளமேடு (கோயம்புத்தூர்), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), தருமபுரி PTO (தர்மபுரி), திருப்பூர், சித்தார் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சேலம், அன்னூர் (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 2,

சூளகிரி (கிருஷ்ணகிரி), குப்பணம்பட்டி (மதுரை), பெரியார் (தேனி), தர்மபுரி, சின்கோனா (கோயம்புத்தூர்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பரூர் (கிருஷ்ணகிரி), தம்மம்பட்டி (சேலம்), பாலக்கோடு (தர்மபுரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
: ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.