பேருந்து ஒன்றில் ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, 13 வயது சிறுவனின் துணிச்சல் செயல் சமூக ஊடகங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது.
சிறுவனின் துணிச்சல் செயல்
2013ம் ஆண்டு பள்ளி பேருந்து ஒன்று சிறுவர்களை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சாலையில் பேருந்து கட்டுப்பாடு இல்லாமல் சென்றதையடுத்து, பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் பீதியில் உறைந்தனர்.
School bus driver suffers heart attack and 13-year-old gets behind the wheel and saves all children’s lives pic.twitter.com/V0hoandvnt
— Great Videos (@Enezator) March 22, 2023
ஆனால் பேருந்தில் இருந்த 13 வயது சிறுவன் துணிச்சலுடன் செயல்பட்டு பேருந்தை போராடி நிறுத்தினான், இதன்மூலம் அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சமூக ஊடகங்களில் மீண்டும் வைரல்
இதையடுத்து இந்த சம்பவத்தின் கிளிப் முதலில் யூடியூப்பில் 2013 ல் வெளியாகி பார்வையாளர்களை வசீகரித்தது.
இந்நிலையில், இந்த வீடியோ மீண்டும் சமூக வலைதளங்களில் பரவி வருவதால், இந்த சிறுவனின் செயல் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.
சம்பந்தப்பட்ட வீடியோவில் கமெண்ட் செய்துள்ள பலர், சிறுவனின் பெற்றோர்கள் அவரைப் பற்றி பெருமைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.