திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வந்தனர். இதையடுத்து இந்த பேருந்து வேடசந்தூர் அருகே சேனன் கோட்டையில் வந்துகொண்டிருந்தது.
அப்போது திடீரென பேருந்து சக்கரம் கழண்டு ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர் அந்த காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளமும் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ வைரலானதை அடுத்து, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளதாவது:- “பொதுமக்கள் பயணம் செய்யும் பேருந்துகள் இதுபோன்ற நிலையில் இருந்தால், பயணிகளின் பாதுகாப்பு என்னவாகும். பேருந்துகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயணம் செய்கிறார்கள். அப்படி செல்லும்போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டு பெரிய விபத்துகள் நடந்தால் என்னவாவது? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.