திருச்சி: திருச்சியில் வன்முறையை தூண்டும் வகையிலும், அவதூறாகவும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சீமான் உட்பட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500பேர் மீது கன்டோண்மென்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மார்ச் 23ல் திருச்சி மத்திய பேருந்துநிலையம் அருகே நடந்த போராட்டத்தில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.