திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடிப்பழக்கதால் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக திருமணமான ஒன்றரை ஆண்டில், கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோத்தக்குடியை சேர்ந்த சுபாஷ், அஷ்டலட்சுமி ஆகியோர் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த நிலையில் அவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை உள்ளது.
சுபாஷிற்கு குடிப்பழக்கம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில், அஷ்டலட்சுமி வீட்டிலும், சுபாஷ் அருகில் உள்ள பருத்திக்கொல்லையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தம்பதி எடுத்த விபரீத முடிவால் மூன்றுமாத கைக்குழந்தை பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.