அமெரிக்காவில் விமானம் ஒன்றின் விமானி நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், விமானப்பயணி ஒருவர் விமானத்தை தரையிறக்க உதவிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
விடயம் என்னவென்றால், அந்தப் பயணி, பணியில் இல்லாத வேறொரு விமானத்தின் விமானி!
நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்ட விமானி
புதன்கிழமையன்று, அமெரிக்காவின் லாஸ் வேகஸிலிருந்து கொலம்பஸ் என்ற இடம் நோக்கி விமானம் ஒன்று பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் விமானி மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, சுயநினைவிழந்ததால் விமானத்தை இயக்க இயலாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.
விமானத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த விமானத்தில் வேறொரு விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் பயணம் செய்துள்ளார்.
உடனடியாக அவர் உதவிக்கு வர, தரைக்கட்டுப்பாடு நிலையத்தின் உதவியுடன், விமானம் பத்திரமாக லாஸ் வேகஸுக்குத் திரும்பியுள்ளது.
விமானத்தின் விமானிக்கு என்ன உடல் நல பாதிப்பு என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
(Representative pic/Unsplash)