திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பணம் தராத தள்ளுவண்டி கடை உரிமையாளரை திருநங்கைகள் கட்டையால் தாக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை நடத்தி வரும் இசக்கி பாண்டி என்பவர் நேற்று இரவு வியாபாரம் முடிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் தள்ளுவண்டியோடு பெரியார் நகரில் உள்ள வீட்டிற்கு வந்தபோது, திருநங்கை ஒருவர் அவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.
இசக்கிபாண்டியன் பணம் இல்லை என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்ற நிலையில், ஆத்திரமடைந்த திருநங்கை மேலும் சிலரை அழைத்து வந்து, அவரது வீட்டின் மீது கற்களை வீசியுள்ளனர்.
சத்தம் கேட்டு வெளியே வந்த இசக்கி பாண்டியனையும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இசக்கிபாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.