பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம்


பற்களை சரி செய்வதற்காக பிரித்தானியர் ஒருவர் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பயணம் செய்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


தீராத பல் வலியால் அவதி

ரிச்சர்ட் ஹோவ்(58) என்ற பிரித்தானியர் ஒருவர் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில்,  கேம்பிரிட்ஜ்ஷையரில்(Cambridgeshire) உள்ள Ely-யில் மருத்துவ சந்திப்பு ஒன்றை பதிவு செய்ய முயன்றுள்ளார்.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை புதிய NHS நோயாளிகளை எடுப்பது இல்லை என்று தெரிவித்துள்ளது.

அத்துடன் தனிப்பட்ட சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்றால் கிட்டத்தட்ட £ 1,000 செலுத்த வேண்டும் என்று ரிச்சர்ட் ஹோவ்-விடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம் | Uk Man Travels War Torn Ukraine To Get Teeth FixedJames Linsell-Clark SWNS

இதனால் அவரால் பிரித்தானியாவில் அவரது பல் பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை.

இதையடுத்து ரிச்சர்ட் ஹோவ்(Richard Howe, 58) உக்ரைனின் கீவ்வில் பல் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார், அதற்கான பயண கட்டணங்கள் மற்றும் பல் சிகிச்சை செலவுகள் போன்றவை பிரித்தானியாவில் மருத்துவர்களால் மேற்கோள் காட்டப்பட்ட செலவில் பாதியாக இருந்துள்ளது.


பல் சிகிச்சைக்காக உக்ரைன் பயணம்

இந்நிலையில் கடுமையான பல் வலியால் அவதிப்பட்டு வந்த ரிச்சர்ட், உடனடியாக ரஷ்ய ராக்கெட்டுகளால் தொடர்ந்து தாக்கப்படும் கிவ் நகருக்கு 13 மணி நேர ரயில் பயணத்தின் மூலம் சென்றடைந்துள்ளார்.

பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம் | Uk Man Travels War Torn Ukraine To Get Teeth FixedAP

அதற்கு முன்னதாக பிரித்தானியாவில் இருந்து  போலந்தில் உள்ள லுப்ளினுக்கு விமானத்தில் 1,500 மைல்கள் பயணம் செய்தார்.

ரிச்சர்ட் இந்த பயணத்திற்கான விமான டிக்கெட்டிற்கு  £127 மற்றும் ரயில் பயணத்திற்காக  £54 செலவு செய்துள்ளார். பல் மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து மொத்தமாக  £220 செலவு செய்துள்ளார்.

முன்னாள் மோட்டார் தொழிலாளரான ரிச்சர்ட் உக்ரேனிய தலைநகரில் 12 ஆண்டுகளாக வசித்து வந்தார், அங்கு ஒரு வீட்டை அவர் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

பற்களை சரிசெய்வதற்காக உக்ரைனுக்கு பறந்த பிரித்தானியர்: வெளியான உண்மை காரணம் | Uk Man Travels War Torn Ukraine To Get Teeth FixedJames Linsell-Clark SWNS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.