‘பிரேக்-அப்’பிலிருந்து இளைஞர்களை மீட்க புதிய திட்டம் | கனடாவில் காந்தி சிலை சேதம் – உலகச் செய்திகள்

காதல் பிரேக்-அப்களில் சிக்கித்தவிக்கும் இளைஞர்களை மனதளவில் மேம்படுத்த ‘லவ் பெட்டர்’ (Love Better) என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறது நியூசிலாந்து. இந்தத் திட்டத்துக்காக 4 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யப் போரை நிறுத்த, அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை நடத்த சீனா, ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த, பெற்றோர்களின் ஒப்புதலைக் கட்டாயமாக்கியிருக்கிறது அந்த அரசு. இந்தச் சட்டம் மார்ச் 2024-லிருந்து நடைமுறைக்கு வருகிறது.

மன்னரான பின்பு முதன்முறையாக பிரான்ஸுக்குப் பயணம் செய்தார் சார்லஸ். இந்த நிலையில், பிரான்ஸில் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் பணி ஓய்வு வயது நீட்டிப்பு தொடர்பான மசோதாவை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் ஒன்டாரியோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் அங்கிருக்கும் காந்தி சிலை சிதைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைனின் சுமி பகுதியில், ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பெண்கள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக முதன்முறையாக டி-20 போட்டிகளில் வெற்றி\பெற்று சாதனை புரிந்திருக்கிறது ஆப்கானிஸ்தான் அணி.

ஒட்டாவாவில் அமெரிக்க அதிபர் பைடனும், கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் சந்தித்த நிலையில், இரண்டு நாடுகளுக்குமிடையேயுள்ள இடப்பெயர்வு, பாதுகாப்புச் சிக்கல்கள் ஆகியவை பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் வசித்துவரும் ஒரு பெண், திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைப்பாட்டால், ஒரு வருடத்துக்கும் மேலாகச் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டுவருகிறார். இந்தக் குறைபாடு தன் வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டுவிட்டதாக வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.