அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தனது படுக்கையை திருப்பி பார்த்த போது கொடிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பெண்ணின் படுக்கையில் விஷ பாம்பு
அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர், அவரது படுக்கை மெத்தையில் உள்ள பெட் சீட்டை மாற்றப் போகும் போது, நெளியும் விஷ பாம்பு ஒன்றை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த பெண் அவரது படுகையை இந்த வார தொடக்கத்தில் சரி செய்த போது ஆறு அடி நீளமுள்ள Eastern Brown snake ஒன்று நெளிந்து கொண்டு இருப்பதை கண்டுபிடித்தார்.
பின், உடனடியாக பாம்புகளை மீட்டு இடம் மாற்றும் குழுவினான Zachery’s Snake and Reptile Relocation-ஐச் சேர்ந்த Zachary Richards ஐ தொடர்பு கொண்டு உதவியை நாடியுள்ளார்.
இதையடுத்து, பாம்பு மீட்கப்பட்டு வீட்டிற்கு வெளியே பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது.
பெண்ணின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட பாம்பு உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
பெண்ணின் வீட்டில் இருந்து பாம்பை பத்திரமாக மீட்ட Zachary Richards, பாம்பின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அதில் “இன்றிரவு படுக்கையை கவனமாக சரிபார்க்கவும்! இந்த கிழக்கு பழுப்பு நிற பாம்பு பாதுகாப்பாக இடம்பெயர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.