டெல்லியில் தொழிலதிபர்களின் மனைவிகளை மிரட்டி ரூபாய் 200 கோடிக்கும் அதிகமாக பணம் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைதுசெய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து கொண்டே தொழிலதிபர்களை மிரட்டுவது, மிரட்டி சம்பாதித்த பணத்தை நடிகைகளுக்காக செலவு செய்வது போன்ற காரியங்களில் சுகேஷ் ஈடுபட்டார். இதில் பாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகளை பணம் மற்றும் பரிசு கொடுத்து நட்பாக்கிக்கொண்டார். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் நட்பையும் தாண்டிய காதல் உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஜாக்குலினுக்கு சுகேஷ் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசு, பணம் கொடுத்தார்.
இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு, டெல்லி போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிவித்திருக்கிறார். இதனை நடிகை ஜாக்குலினும் உறுதிபடுத்தியிருக்கிறார். இதனால் மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஜாக்குலினும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். சிறையிலிருந்து கொண்டு அடிக்கடி சுகேஷ் ஜாக்குலினுக்கு கடிதம் எழுதி வருகிறார். கடந்த ஹோலி பண்டிகைக்கு கூட கடிதம் எழுதியிருக்கிறார். தற்போது தன் பிறந்தநாளையொட்டி ஜாக்குலினுக்கு காதல் கடிதம் ஒன்றை சுகேஷ் எழுதியிருக்கிறார்.
அதில், “எனது பேபி ஜாக்குலின் பெர்னாண்டஸ்… என் பொம்மா இந்த நாளில் உன்னை ஆயிரம் மடங்கு மிஸ்செய்கிறேன். என்னை சுற்றியிருக்கும் ஆற்றலை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அதனை சொல்ல வார்த்தைகள் இல்லை. என் மீது உனக்கு இருக்கும் அன்பு ஒருபோதும் முடிவுக்கு வராது என்று எனக்கு தெரியும். உன் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும்.
எனக்கு அதற்கு ஆதாரம் தேவையில்லை பேபி. உன் காதல் என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மதிப்பில்லா பரிசு. என்ன வந்தாலும் உனக்காக நான் இங்கே இருக்கிறேன் என்று உனக்கு தெரியும். உன் இதயத்தை கொடுத்தமைக்காக நன்றி. லவ் யு பேபி. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.