சென்னை: போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார். போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசின் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளை செய்ய வலியுறுத்தி வருகிறேன். போதைப்பொருள் தொடர்பான காவல்துறையின் குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என சென்னை காவல்துறையின் விழிப்புணர்வு குறும்படத்தை சுட்டிக்காட்டி டிவீட்டரில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.