மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விழாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜீஜூ பேசியதாவது:
அரசு நீதித்துறை இடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அது முரண்பாடுகள் இல்லை. இது உலகம் முழுவதும் தவறான செய்தியை அனுப்புகிறது. பல விதமான அமைப்புகளுடன் எந்த பிரச்னையும் இல்லை. நாம் ஜனநாயகத்தில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கண்ணோட்டத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அவை முரண்பாடுகள் அல்ல. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நீதித்துறை சுதந்திரமாக செயல்பட அரசு எப்போதும் ஆதரிக்கும். மாநிலங்களில் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களுக்காக கடந்தாண்டு அரசு 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இதனை முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். சில மாநிலங்களில், நீதிமன்றங்களின் தேவை மற்றும் அரசை புரிந்து கொள்வது ஆகியவற்றில் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது.
எதிர்காலத்தில், நீதித்துறை காகிதமில்லா துறையாக மாற வேண்டும்.
தொழில்நுட்ப உதவியுடன் அனைத்து தகவல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் ஆதாரங்கள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக வழக்குகளை நீதிபதிகள் ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. இதற்கான பணிகள் நடந்து கொண்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement