2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசியதாக குஜராத் முன்னாள் எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்து நாடாளுமன்ற செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் […]