மோடி, அமித் ஷா மீது நடவடிக்கை எடுங்க; விருதுநகர் போலீசிடம் காங்கிரஸ் புகார்..!

கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது கர்நாடகாவில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி ” பெயரில் மோடி என வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்களே என்று பேசினார். அதாவது, நிரவ் மோடி, லலித் மோடி, ஆகிய மோடி என்று பெயர் வைத்துள்ளவர்கள் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி மறைமுகமாக நரேந்திர மோடியை சாடி பேசியிருந்தார்.

அதற்கு சூரத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு சூரத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. அதனை அடுத்து எம்பி பதவியில் இருந்தும் ராகுல் காந்தி நீடிக்கப்பட்டார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், குஜராத்தில் நடந்த கலவரத்தை மறு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் மாணவர் அணி விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002 ஆம் ஆண்டு ரயில் எரிப்பு சம்பவம் மற்றும் கலவரம் நடந்தது. இதில், 27 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 59 பேர் தீயில் கருகி இறந்தனர் என்றும் 48 பேர் காயமடைந்தனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக மறு விசாரணை நடத்த வேண்டும், கலவரத்தை தூண்டிய அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விருதுநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைமை சின்னதம்பி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெயிலு முத்து முன்னிலையில 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிரதமர் மோடிக்கு எதிராக மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.