“ராகுல் காந்தி தகுதி நீக்கம் முழுக்க முழுக்க சட்டப்படி நடந்தது”– எல்.முருகன் கருத்து

“தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
இதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. திமுக அரசின் பட்ஜெட் மக்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் இல்லை. கடந்த பட்ஜெட்டில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அரசு முழுவதுமாக செலவு செய்யவில்லை. இதுபற்றி எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் சட்டமன்றத்தில் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்.
image
தேர்தல் சமயத்தில் திமுக ‘குடும்பத் தலைவிகள் அனைவருக்கும்’ தலா 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது ‘தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே’ தலா 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறுகிறது. இந்த விஷயத்தில் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
ராகுல் காந்தியின் தகுதி இழப்பு விஷயம், நீதிமன்ற தீர்ப்பை சார்ந்ததுதான். முழுக்க முழுக்க சட்டப்படி நடைபெற்றுள்ளது அந்நடவடிக்கை” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.