மோடி குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பின்தங்கிய வகுப்பினர் அனைவரையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தியுள்ளதாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். ஒட்டு மொத்த பிற்பட்ட வகுப்பினரையும் தொடர்ந்து இதுபோல் அவதூறாக பேசினால் ராகுல் காந்தி தெருவில் நடமாட முடியாது என்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் ஷிண்டே பேசியுள்ளார். மகாராஷ்டிரா மாநில மக்கள் மட்டுமன்றி இந்திய மக்கள் அனைவரும் சாவர்க்கரை தெய்வமாக போற்றிவருகின்றனர். அவரை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. […]