அரசியல் சுயலாபம், வாக்கு வங்கிக்காக, சில கட்சிகள் மொழி பிரச்னைகளை எழுப்புவதாகவும், கிராமப்புற, ஏழை மாணவர்கள், மருத்துவர், பொறியாளராக உருவாவதை அவர்கள் விரும்புவதில்லை என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவின் சிக்கபள்ளாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அனைவரது முயற்சியும், பங்களிப்புமே 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னதாக, பாரத ரத்னா விருதினை பெற்ற புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரையாவின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.