வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ்

நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். கனா, நெஞ்சுக்கு நீதி படங்களை தொடர்ந்து அடுத்து 'லேபிள்' என்கிற வெப் சீரிஸை இயக்குகிறார். இதில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகிய முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கிறார்கள். கதையை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

அருண்ராஜா காமராஜ் கூறுகையில், ” ஒருவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பதை பொறுத்தே, அவனது குணாதிசயம் இருக்கும் என்கிற பொதுப்படை எண்ணமே இங்கு பலருக்கும் இருக்கிறது. இதுவே அவர்களை தவறான வழியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைகிறது. இப்படி தனது வாழ்விடம் சார்ந்தே தனது வாழ்க்கை அமையும் என்பதை ஒருசிலரால் மட்டுமே மாற்றியமைக்கவும் முடிகிறது. ஆனால் இந்த சமூகம் தனது பொதுப்படையான பார்வையை மாற்றியமைக்குமேயானால் , ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க முடியும்” என்றார்.

முத்தமிழ் படைப்பகம் தயாரிக்கும் இந்தத் தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.