14 மாதங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை!


பிரித்தானியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீர் கழிக்க முடியாத ஒரு பெண்ணுக்கு ஒரு அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது, இது தனது வாழ்க்கையை “முற்றிலும் மாற்றியது” என்று அவர் கூறுகிறார்.

லண்டன் பெண்

லண்டனைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் (Elle Adams) என்ற இளம் பெண் தனது வாழ்க்கையை மாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். அக்டோபர் 2020-ல், தன்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்பதை எல் உணர்ந்தார்.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைத்தாலும் எல்லே ஆடம்ஸால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. அவரது இந்த நிலைக்கு ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் (Fowler’s syndrome) தான் காரணம்.

14 மாதங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை! | Uk Woman Unable To Urinate 14 Months Rare SyndromePC: Elle Adams/Instagram

சிறுநீர் கழிக்க முடியவில்லை

இந்த நோயைக் கண்டறியும் வரை அவர் முற்றிலும் ஆரோக்கியமாக இருந்ததாக எல் கூறுகிறார். ஒரு நாள் அவர் தூக்கத்திலிருந்து விழித்தபோது, தன்னால் ​​சிறுநீர் கழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்தார்.

பின்னர் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனைக்கு அவர் சென்று மருத்துவரை அணுகியபோது அவரது சிறுநீர்ப்பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பொதுவாக, ஒரு பெண்ணின் சிறுநீர்ப்பையில் 500 மில்லி மற்றும் ஆண்களின் சிறுநீர்ப்பையில் 700 மில்லி சிறுநீரை மட்டுமே வைத்திருக்க முடியும்.

வடிகுழாய் செருகப்பட்டு சிறுநீர் வடிகட்டப்பட்டது

நிலைமை சற்று மோசமாக தெரிந்ததால், ஒரு அவசர வடிகுழாய் செருகப்பட்டு அவரது சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வடிகட்டப்பட்டது. ஆனாலும் பிரச்சனை தீரவில்லை.

14 மாதங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை! | Uk Woman Unable To Urinate 14 Months Rare SyndromePC: Elle Adams/Instagram

வடிகுழாயை வெளியே எடுத்துவிட்டு சிறுநீர் கழிக்க செல்ல முயற்சிக்கவேடும் அல்லது அப்படியே வீட்டிற்குச் செல்ல முயற்சிக்கவும், மூன்று வாரங்களில் மறுமதிப்பீட்டிற்காக மருத்துவமனைக்கு மீண்டும் வரவும் அவருக்கு விருப்பம் வழங்கப்பட்டது.

ஒரு வாரம் கழித்து சிறுநீரக மருத்துவ மையத்திற்குச் சென்ற பிறகு, எல்லே ஆடம்ஸுக்கு சுய-வடிகுழாய் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

14 மாதங்களாக அவதி

சில மருத்துவர்கள் எல்லேவிடம் அவரது பிரச்சனைக்கு காரணம் அதிகப்படியான பதட்டம் என்றும், யோகா அல்லது ஏதாவது செய்வதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும் சொன்னார்கள். பின்னர் ஒரு வருடத்திற்கும் மேலாக, எல்லே ஆடம்ஸ் ஒரு குழாய் உதவியுடன் மட்டுமே சிறுநீர் கழிக்கமுடிந்தது.

அதன்பிறகு 14 மாதங்களுக்குப் பிறகு, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு எல்லேவிற்கு ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் வாழ்நாள் முழுவதும் சிறுநீர் கழிக்க வடிகுழாயின் உதவி தேவைப்படலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஃபோலர்ஸ் சிண்ட்ரோம் என்பது சிறுநீர்ப்பை சிறுநீரை காலி செய்ய முடியாத நிலை ஆகும். பெரும்பாலும் இளம் பெண்களை பாதிக்கும் இந்த நிலைக்கான காரணம் இன்னும் ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

14 மாதங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை! | Uk Woman Unable To Urinate 14 Months Rare SyndromePC: Elle Adams/Instagram

சாக்ரல் நரம்பு தூண்டுதல் சிகிச்சை

பல்வேறு மருந்துகள் முயற்சித்தும் சிகிச்சை அளித்தும் அவரது நிலை மாறவில்லை. சாக்ரல் நரம்பு தூண்டுதல் மட்டுமே எலினுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த ஒரே தீர்வு.

எல்லே ஆடம்ஸ் 2023-ஜனவரில் இந்த சாக்ரல் நரம்பு தூண்டுதல் சிகிச்சையை மேற்கொண்டார். முழுப் பலனையும் காணாவிட்டாலும் தற்காலிக நிம்மதி அடைந்துவிட்டார் என்பது எலின் வாதம். முன்பு ஒரு வடிகுழாயின் உதவியுடன் சிறுநீர் கழித்ததிலிருந்து சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்னும் இது கடினமாகவே உள்ளது, ஆனால் முந்தைய சூழ்நிலையைப் பற்றி நினைத்தால், அது மிகவும் மேம்பட்டுள்ளது என்று எல்லே கூறுகிறார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.