10 ஆம் வகுப்பில் படிப்பை முடித்துவிட்டு தனது அப்பா என்ன செய்ய போற? என கேள்விக்கு அஜித் அளித்த பதில் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை பி.எஸ் மணி, வயது முதிர்வின் காரணமாக நேற்று அதிகாலை காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி அஜித்தின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தந்தைக்கு அஜித் செய்த தியாகங்கள் குறித்தும், அஜித்துக்கு உறுதுணையாக இருந்த அவரது தந்தை குறித்து தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன.
அதில், 10ம் வகுப்பு முடித்ததும் அஜித்திடம் என்ன செய்யப்போகிறாய்? என அவரது தந்தை வினவியுள்ளார்.
அதற்கு, நான் வேலைக்கு செல்கிறேன் என பதிலளித்துள்ளார் அஜித், பின்பு துணி வியாபாரம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார், அதுவும் நட்டம் அடைந்துள்ளது.
அதன் பின்பு மொடலிங்கில் ஆர்வம் காட்டியுள்ளார், இடையில் இருசக்கரவண்டி மேலுள்ள ஆர்வத்தினால் மெக்கானிக் வேலையும் பார்த்துள்ளார்.
அதன் பின்பு தெலுங்கில் “பிரேமா புஸ்தகம்” என தன் முதல் படத்தை நடித்து நடிப்பிலே கவனத்தை திருப்பியுள்ளார்.
தமிழில் இவர் முதல் முறையில் நடித்த படம் அமராவதி ஆகும், இதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.
தொடக்கத்தில் இவர் ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்த, என்றாவது ஒருநாள் உங்களை ரசிகர் கூட்டம் பின் தொடரும், அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என தன்னம்பிக்கையோடு ஒரு வாக்கியத்தை கூறியுள்ளார்.
ஒரு சில படங்களை நடித்து அதுவும் கைகொடுக்காத நிலையில் வான்மதி என்ற படத்தில் நடித்தார்.
இது நல்ல ஒரு வரவேற்பை கொடுத்தது, அதன் பின் அதே இயக்குனரின் கதையில் மீண்டும் அஜித் நடித்தார்.
இவ்வாறாக இவரின் பெயரை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் பதித்து கொண்டிருந்த வேளையில் திடீரெனெ விபத்து ஒன்றில் முதுகில் பலமான அடி பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை மோசமாக இருந்த போதும், தனது விடா முயற்சியால் கிடைத்த வாய்ப்பினை தவறவிட கூடாது என்று மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
அஜித்திற்கு இது போல பல விதமான தடைகள் வந்துள்ளது.
அவருக்கு சிறந்த புதுமுக நடிகர் என்ற விருதும் கிடைத்தது.
தொடக்க சினிமா காலத்தில் அஜித்தின் எல்லா அவமானங்களுக்கும் பதில் கூறி விட்டது அவரது வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும்.
இன்று உலகமே ரசிக்கும் விதத்தில் அவர் முன்னணி நடிகராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.
இவை அனைத்திற்கும் அவரது விடா முயற்சி மற்றும் அர்ப்பணிப்பே காரணம் என்றுதான் சொல்ல வேண்டும்.