36 செயற்கைகோளுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!

பெங்களூரு : LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது. நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில்நிலைநிறுத்துகிறது. இதில் வணிகரீதியான செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் ஏவப்பட்டன.பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

இதையடுத்து வர்த்தக செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாக செலுத்துவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்தஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.அதில் முதல்கட்டமாக 36 செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த அக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக 36 செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து மார்ச் 26-ம் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் தான் தற்போது LVM3-M2 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் இன்று காலை தொடங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.