நடிகர் அஜித்தின் தந்தை நேற்றைய தினம் உயிரிழந்தார். நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று அதிகாலை தூக்கத்திலே காலமானார். நேற்று முழுவதும் அஜித்தின் உடனிருந்து இறுதிச்சடங்கு முடியும் வரை அனைத்து பணிகளையும் கவனித்துக்கொண்டார் நடிகர் பெசன்ட் ரவி. இந்நிலையில் இவர் யூடிப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் அஜித் குமாரின் அப்பாவான பி. சுப்ரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். இவர் நேற்று அதிகாலையில் சுப்ரமணியம் தூக்கத்திலே உயிர் நீத்தார். தந்தையின் மரணம் தொடர்பாக அஜித்தும் அவரது சகோதரர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த துயர நேரத்தில் பலரும் எங்களிடம் விசாரிக்கவும், ஆறுதல் கூறவும் தொலைப்பேசி மற்றும் குறுந்தகவல் வாயிலாக தொடர்பு கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போதையை சூழ்நிலையில் எங்களால் உங்களுக்கு பதிலளிக்க முடியவில்லை. இதை நீங்க புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாக இருக்க விரும்புகிறோம்.
எனவே இதனை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தனர். இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் நேரில் வந்து அஜித்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து ஈசிஆர் வீட்டில் அஜித்குமார் தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
Sivakarthikeyan: விஜய் பாணியை கையிலெடுக்கும் எஸ்கே: தரமான சம்பவம் லோடிங்..!
இந்நிலையில் நேற்றைய தினம் இறுதிச்சடங்கில் நடிகர் அஜித்குமாரின் நண்பரும், அவருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள நடிகர் பெசன்ட் ரவி கடைசி வரை இருந்து அனைத்து பணிகளையும் செய்தார். இவர் தற்போது யூடிப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித்குமார் ஒருவர் காலில் விழுந்தது குறித்து கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பெசன்ட் ரவி, அவர் அஜித்குமார் சார் அப்பாவை கவனித்துக்கொண்ட டாக்டராக இருக்கலாம். அப்போது அவர் கண் கலங்கிவிட்டார். இறுதிச்சடங்கை முடித்துவிட்டு வந்தும் கூட அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள். போலீஸ் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொன்னார். இந்த பண்பு தான் அஜித் சாரை இந்தளவிற்கு உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது என கூறியுள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Sindhu: வீடியோ காலில் மார்பகத்தை காட்ட சொன்ன நபர்: கதறி அழுத நடிகை சிந்து.!