பிரபல கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நூற்றுக் கணக்கான பாடல்களை பாடி உள்ளார். தமிழில் மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடல், காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ஒன்றா ரெண்டா ஆசைகள் உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலம்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
Aathmika: தான் நடித்த படத்தை தனது தாத்தாவுடன் சென்று பார்த்த ஆத்மிகா… டிவிட்டரில் நெகிழ்ச்சி!
பாம்பே ஜெயஸ்ரீ சினிமா பாடல்கள் மட்டுமின்றி பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பாம்பே ஜெயஸ்ரீ லண்டனிற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் ஹோட்டல் அறையில் சுய நினைவில்லாமல் கிடந்துள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ.
இதையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர், அவரை மீட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதித்தனர். எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானதும் அவரது ரசிகர்கள் பதற்றமடைந்தனர்.
Nayanthara:மீண்டும் பிகினியில் தரிசனம் கொடுக்கும் நயன்தாரா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
லண்டன் மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பாம்பே ஜெயஸ்ரீயின் டிவிட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது “பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நிலை சரியில்லாமல் போனபோது உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் பாம்பே ஜெயஸ்ரீ விரைவில் பூரண நலம் பெற வேண்டும் எனவும் அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Aishwarya Rajinikanth: ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பினாமி நான்… அதிர வைத்த ஈஸ்வரி!