டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ம் தேதி நடைபெற்றது.
மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இதற்கிடையே, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் காரணமாக குரூப்-4 தேர்வு முடிவுகள் தொடர்ந்து காலதாமதமாகி வந்தது. பின்னர் பிப்ரவரி 2-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியாகும் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் ஒரு வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு முடிவுகளை கீழ்காணும் முகவரியில் தெரிந்துகொள்ளலாம்
– https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நியமனம் செய்யப்பட வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை 7,381-லிருந்து 10,117 ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.