India 6G: இந்தியாவில் 6G சேவை எப்போ வெளியாகும்? நம்பிக்கை கூறும் பிரதமர் நரேந்திர மோடி!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவிற்கான 6G சேவை தற்போது ஆராய்ச்சி மற்றும் உருவாக்கத்தில் இருந்தது. இதை பிரதமர் மோடி Bharat 6G Vision என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். ஏற்கனவே 5G சேவை வெளியாகியுள்ள நிலையில் 6G சேவை வெளியாவது குறித்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்யப்பட்டுவருகிறது. இந்த திட்டத்தை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இதற்கான சோதனை ஓட்டத்தை தற்போது பிரதமர் துவக்கியுள்ளார். இதற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த Bharat 6G மூலமாக புதிய கண்டுபிடிப்புகள், அதிவேக இணைய டெக்னாலஜி போன்றவை உருவாக்கப்படும். முதலில் இதற்கான திட்டங்களை பற்றி விவாதிக்கப்படும். அதன் பிறகு அதற்கு தேவையான டெக்னாலஜி மற்றும் செலவுகள் பற்றி விரிவாக பேசப்படும்.

இந்த புதிய 5G சேவை மூலமாக 40 முதல் 1100MBPS முதல் 10 ஆயிரம் MBPS வரை இணைய வேகம் கிடைக்கும். இதைவிட 6G வேகம் 1TBPS வரை கிடைக்கும். இந்த 6G டெக்னாலஜி IIT மூலம் உருவாக்கப்படவுள்ளது. 5G வெளியாகிய ஆறு மாதங்களில் 6G பற்றி இந்தியாவில் பேசுவது என்பது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் நம்பிக்கை பிரகாசமாக உள்ளதை குறிப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்த 6G சேவை என்பது இரண்டு கட்டங்களாக இந்தியாவில் அமல்படுத்தப்படும். முதல் கட்ட பணிகள் (2023-2025) வரை நடைபெறும். இரண்டாம் கட்ட பணிகள் (2025-2030) வரை நடைபெறும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.