Pathu Thala: திருமணத்திற்கு பிறகு கிளாமர் டான்ஸ்: சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் சாயிஷா..!

சிம்பு ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது ‘பத்து தல’ படம். சிம்பு தாதா கேரக்டரில் நடித்துள்ள இந்தப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்படத்தில் நடிகை சாயிஷா ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ள ‘ராவடி’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது.கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த்தார். ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்தப்படத்திற்கு முன்பாகவே ‘பத்து தல’ படம் துவங்கியது. கெளதம் கார்த்திக் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் சிம்பு முரட்டுத்தனமான தாதா கேரக்டரில் நடிக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘முப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக ‘பத்து தல’ உருவாகியுள்ளது. கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் சிம்பு நடித்துள்ளார்.

‘பத்து தல’ படத்தை சில்லுன்னு ஒரு காதல் இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கெளதம் மேனன், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்யபுத்திரன், கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் ‘பத்து தல’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் அப்பாவான பக்ரு: தீயாய் பரவும் புகைப்படம்.!

இந்நிலையில் இந்தப்படத்தின் ‘ராவடி’ என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்பாடலுக்கு சாயிஷா நடனம் ஆடியுள்ளதாக படத்தின் இசை வெளியீட்டின் போது படக்குழு அறிவித்தபோதே, ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் தொற்றிக்கொண்டது. முன்னதாக ‘புஷ்பா’ படத்தில் ஊ சொல்றிய என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்தார். இந்தப்பாடல் படத்தின் புரமோஷனுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது.

Ajith: அஜித் சார் அவர் காலில் விழுந்து கலங்கினார்: பெசன்ட் ரவி பகிர்ந்த உருக்கமான தகவல்.!

இந்நிலையில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயான பின்பு ‘ராவடி’ ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் சாயிஷா. இந்தப்பாடலில் சமந்தாவுக்கே சாயிஷா டஃப் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். ‘ராவடி’ ஒஆடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘பத்து தல’ படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.