அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்| Indian Journalist Attacked By Khalistan Supporters In US, Rescued By Cops

வாஷிங்டன்: அமெரிக்காவில் காலிஸ்தானிய போராட்டத்தின் போது, இந்திய பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாபில், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், ‘வரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தீவிரவாத போதகராக உள்ள இவர், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் உள்ளார்.

இதற்கிடையில் காலிஸ்தானிய தலைவரான பஞ்சாப்பின் அம்ரித்பால் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தப்பியோடியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாஷிங்டனின் இந்தியத் தூதரகத்தின் வெளியே காலிஸ்தானியப் போராட்டத்தை செய்தியாக்கிக் கொண்டிருந்தபோது, லலித் ஜா என்ற இந்திய பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.