அரச ஊழியர்களின் சம்பளத்தில் பெருந்தொகை முப்படையினருக்காக செலவு


இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்களின் ஆய்வின் முடிவில் அரச ஊழியர்களின் சம்பள மொத்தத் தொகையில் (48.8 சதவீதம்) முப்படையினருக்கு செலவிடப்படுவது தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட ஆய்வானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தலைமையில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரசன்ன பெரேரா மற்றும் கலாநிதி நந்தசிறி கிஹிம்பியஹெட்டி ஆகியோரால் நடத்தப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பெருந்தொகை முப்படையினருக்காக செலவு | 48 8 Persent Of Gov Salary Allocated To Fources

நான்கில் ஒரு பங்கு  பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்கள்

நாட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஆண்டுக்கு 69,491 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது, இதில் பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க 33,940 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக குறித்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பெருந்தொகை முப்படையினருக்காக செலவு | 48 8 Persent Of Gov Salary Allocated To Fources

அத்துடன் ஏறக்குறைய பதினாறு இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும், அவர்களில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோர் (நான்கில் ஒரு பங்கு) பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நாட்டில் இரண்டாவதாக சுகாதார அமைச்சுக்கு அதிகளவாக 11,800 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

அதன் பின்னர் கல்வி அமைச்சுக்கு 5,930 கோடியும், பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 4,274 கோடியும் செலவிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.